Descriptions
ஆருத்ரன் அறக்கட்டளை.சைவ சித்தாந்தம் அடிபடையில் வாழ்வியல் முறையினை அனைவருக்கும் தெரிவிக்கும் பணியில் ஈடுபட்டு ஊள்ளது. இதன் நோக்கங்கள் பின்வருமாரு.
1) அணைத்து இல்லங்களிலும் திருமுறை பண்முறைபடி பாராயணம்.
2) நமது இல்லங்களில், திருமுறைகள் ஓதி சித்தாந்த முறைபடி பிறப்பு முதல் இறப்பு வரையிலான அனைத்து சடங்குகளை நிகழ்த்துதல் ( நமக்கு நாமே திட்டம்)
3) நால்வர் பெருமக்கள் காட்டிய அணைத்து திருமுறை கோயிள்களிலும், தரிசிக்க வரும் அடியார்கள் தங்க, மற்றும் அன்னம்பாளிப்புக்கு வழிவகை செய்தல்.
4) திருமுறை முற்றோதல் .
5) வசதி வாய்ப்பு குறைந்த கோவில்களுக்கு குடமுழுக்கு இலவசமாக செய்தல்
6) சைவ சித்தாந்தத்தை அனைவருக்கும் இலவசமாக கற்றுக்கொடுத்தல்...
7) சிறப்பாக திருமுறைகள் மற்றும் சித்தாந்தத்தினை அனைவருக்கும் கொண்டுசேர்க்கும் பணியில் செம்மையாக பணியர்ருவோரை பட்டம் வழங்கி சிறப்பித்தல்.
8) திருமுறை புத்தகங்கள் வெளியிடல்
9) திருமுறை திருவிழா நடத்துதல்.
10) தமிழர்கள் வசிக்கும் வெளிநாடுகளுக்கும் இதனை கொண்டுசெல்லுதல்.
... மேலும் பல நல்ல திட்டங்களை கொண்டு இறை திருவருளால் இந்த ஆருத்ரன் அறக்கட்டளை ஆனது 14/டிசம்பர்/2023 அன்று புதுச்சேரியை தலைமையிடமாக கொண்டு துவங்கப்பட்டது. இதன் விரிவாக்கமாக சென்னையில் 2024 ல் வடபழனியை இடமாக கொண்டு செயல்பட்டு வருகின்றது....
அனைத்து மெய்யன்பர்கள் மற்றும் அடியார் பெருமக்களின் உறுதுணையுடன் மேலும் பல நல்ல திட்டங்கள் செயல்படுத்த எல்லாம் வல்ல சிவகாம சுந்தரி உடனாய ஸ்ரீ நடராஜ மூர்த்தி அருள் புறிவாராக.
Add a review